BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 2 December 2024

Filmfare OTT 2024 : `ரஹ்மானுக்கு இரண்டு விருது' - ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ஓ.டி.டி படைப்புகள்!

2024-ம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஃபிலிம் ஃபேர் OTT தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு விருதளிக்க ஆரம்பித்தது. இந்தாண்டு படங்களுக்கான பிரிவில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வெளியான `அமர் சிங் சம்கில்லா' (AMAR SINGH CHAMKILA) மற்றும் தொடர்களுக்கான பிரிவில் `ரயில்வே மென்' (RAILWAY MEN) சீரிஸும் அதிகமான விருதுகள் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

`அமர் சிங் சம்கில்லா' திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த மியூசிக் ஆல்பம் ஆகியப் பிரிவுகளில் இரண்டு விருதுகளை இந்தாண்டு பெற்றிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இதுமட்டுமல்ல, அவர் இதுவரை அவர் 15 ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

விருது பெற்ற திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Amar Singh Chamkila

திரைப்படங்கள் பிரிவு :

சிறந்த படம்: அமர் சிங் சம்கிலா

சிறந்த இயக்குனர் : இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா)

சிறந்த நடிகர் (ஆண்): தில்ஜித் தோசன்ஜ் (அமர் சிங் சம்கிலா)

சிறந்த நடிகர் (பெண்): கரீனா கபூர் கான் (ஜானே ஜான்)

சிறந்த துணை நடிகர் (ஆண்): ஜெய்தீப் அஹ்லாவத் (மஹராஜ்)

சிறந்த துணை நடிகர் (பெண்): வாமிகா கேபி

சிறந்த வசனம் : இம்தியாஸ் அலி மற்றும் சஜித் அலி (அமர் சிங் சம்கிலா)

சிறந்த அசல் திரைக்கதை : இம்தியாஸ் அலி மற்றும் சஜித் (அமர் சிங் சம்கிலா)

சிறந்த ஒளிப்பதிவாளர் : சில்வெஸ்டர் பொன்சேகா ((அமர் சிங் சம்கிலா)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : சுசான் கேப்லான் மெர்வாஞ்சி

சிறந்த எடிட்டிங் : ஆர்த்தி பஜாஜ் (அமர் சிங் சம்கிலா)

சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர். ரஹ்மான் (அமர் சிங் சம்கிலா)

சிறந்த இசை ஆல்பம்: ஏ.ஆர். ரஹ்மான் (அமர் சிங் சம்கிலா)

தொடர் வகை :

சிறந்த தொடர்: தி ரயில்வே மென்

சிறந்த இயக்குனர் : சமீர் சக்சேனா மற்றும் அமித் கோலானி (காலா பானி)

சிறந்த நடிகர், (ஆண்) - நகைச்சுவை: ராஜ்குமார் ராவ் (கன்ஸ் & குலாப்ஸ்)

சிறந்த நடிகர், (ஆண்) - நாடகம்: ககன் தேவ் ரியார் (ஸ்கேம் 2003: தி டெல்கி ஸ்டோரி)

சிறந்த நடிகர், (பெண்) – நகைச்சுவை: கீதாஞ்சலி குல்கர்னி (குல்லாக் சீசன் 4)

சிறந்த நடிகர், (பெண் - டிராமா) மனிஷா கொய்ராலா (ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்)

Guns & Gullabs

சிறந்த துணை நடிகர், (ஆண்) – நகைச்சுவை: பைசல் மாலிக் (பஞ்சாயத்து சீசன் 3)

சிறந்த துணை நடிகர், (ஆண் - டிராமா) : தி ரயில்வே மென் படத்திற்காக ஆர். மாதவன்

சிறந்த துணை நடிகர், (பெண்) – நகைச்சுவை: நித்தி பிஷ்ட், மாம்லா லீகல் ஹை

சிறந்த துணை நடிகர், (பெண் டிராமா) : மோனா சிங் (மேட் இன் ஹெவன் சீசன் 2 )

சிறந்த கதை : பிஸ்வபதி சர்க்கார் (காலா பானி )

சிறந்த நகைச்சுவை (தொடர்/சிறப்பு): மாம்லா லீகல் ஹை

சிறந்த (புனைகதை அல்லாத - தொடர்/சிறப்பு): தி ஹன்ட் ஃபார் வீரப்பன்

சிறந்த வசனம் : சுமித் அரோரா (கன்ஸ் & குலாப்ஸ்)

Neerathikaram | Vikatan Play


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies