கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமை இரவில் மட்டும் ராமநாதபுரம் நகரில் 9 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் பேருந்து நிலையம், சக்கரை கோட்டை, தங்கப்பா நகர் மற்றும் என்மனங்கொண்டான், நாகாச்சி, தேர்போகி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.

பட்டிணம்காத்தான் மற்றும் தேர்போகி பகுதியிலிருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளில் விழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் அப்பகுதிகளுக்குச் சென்று மழை நீரை வெளியேற்றியதுடன், சாலைகளில் விழுந்த மரங்களையும் அப்புறப்படுத்தினர்.

இதே போல் ராமேஸ்வரம் பகுதியில் செவ்வாய்க் கிழமை முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. புதன்கிழமை காலையிலும் மழை தொடர்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், ராமேஸ்வரம் வந்திருந்த யாத்திரைவாசிகளும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் பகல் ஒரு மணி அளவில் மழையின் அளவு அதிகரிக்கத் துவங்கியது. தொடர்ந்து மாலை 4 மணி வரை கொட்டி தீர்த்த 362 மி.மீ மழையினால் ராமேஸ்வரம் நகர் முழுவதும் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
மேக வெடிப்பினால் ஏற்பட்ட வரலாறு காணாத இந்த மழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளான காந்திநகர், ராமர்தீர்த்தம் தெற்கு, தொலைத் தொடர்பு அலுவலகம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது மழை நீர் கடலுக்குச் செல்லும் வகையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதே போல் தங்கச்சிமடத்தில் 32 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்துல்கலாம் நினைவிடம், முருகன் கோயில் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியது. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளான ராஜா நகர், விக்டோரியா நகர் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியது.

பாம்பன் வடக்கு கடற்கரையில் ராட்சச அலைகள் எழுந்த நிலையில் தொடர் மழையும் கொட்டியது. புதன் கிழமை காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 19 செ.மீ மழை கொட்டியதுடன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 28 செ.மீ மழை பதிவானது.
மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு ஏற்பட்டு, 3 மணி நேரத்தில் 19 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் பாம்பன் சின்னப்பாலம் மீனவர் குடியிருப்பு பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமெனச் சூழ்ந்தது. இதனால் மீனவர்கள் பலரது வீடுகளுக்கும் மழை நீர் புகுந்தது.


இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பாம்பன் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அங்கிருந்த மக்களை மீட்டு பாம்பனில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்ததுடன் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளையும் வழங்கினர். சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாறு காணாத மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வியாழன் அன்றும் மழை தொடரும் என ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs