தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டிணம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
மேலும், இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில்,
``சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook