தமிழ் சீரியல்களின் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளில் இன்றைய தேதிக்கு பிஸியாக இருப்பவர் அக்ஷயபிரபா. 'சத்யா' ஆயிஷா, கண்மணி உள்ளிட்ட பலருக்கும் இன்று இவர்தான் டப்பிங் பேசி வருகிறார். சீரியல் மட்டுமல்ல சினிமாவிலும் பலருக்கு இவர் டப்பிங் பேசி வருகிறார்.
இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அக்ஷயாவுக்கு நெருக்கமான சினிமா டிவி நட்சத்திரங்கள் சிலர் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் குறித்து அக்ஷயாவிடமே பேசினோம்.
''ஒரு ஃபிரண்ட் வீட்டு நிகழ்ச்சி ஒண்ணுல தீபக்கைச் சந்திச்சேன். ஐ.டி.யில வேலை பார்த்திட்டிருக்கார். ஆரம்பத்துல எங்களுக்கிடையில நட்புதான் இருந்தது. போகப்போக அது காதலா கன்வெர்ட் ஆகிடுச்சு.
அந்தச் சமயத்துல எங்க ரெண்டு பேர் வீட்டுலயுமே ரெண்டு பேருக்கும் வரன் பார்த்திட்டிருந்தாங்க. அதனால நாம முந்தி விஷயத்தைச் சொல்லிடலாம்னு வீட்டுல சொன்னோம். எங்க வீட்டுல என் விருப்பத்துக்கு உடனே சம்மதம் சொல்லிட்டாங்க. நான் சினிமா, சீரியல்னு மீடியா ஏரியாவுல இருக்கிறதால அவங்க வீட்டுல முதல்ல சின்ன தயக்கம் இருந்திச்சு. இன்னைக்கு டிவி சினிமாவுல திடீர்னு லவ்னு சொல்றாங்க. அடுத்த சில நாட்கள்லயே கல்யாணம் நடக்குது. ஆனா அடுத்த கொஞ்ச நாள்லயே தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகி கடைசியில டைவர்ஸ்ல கொண்டு போய் விட்டுடுது. அதனால அவங்களுடைய தயக்கத்துல ஒரு அர்த்தம் இருக்கத்தான் செஞ்சது.
ஆனா தீபக் என்னை ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டதால இந்தப் பிரச்னையை நாங்க சுலபமா கடந்து வந்துட்டோம். எங்க அறிமுகத்துக்கு முன்னாடியே யூடியூப்கள்ல என்னுடைய பேட்டிகளை நிறைய பார்த்திருந்ததால தீபக்குக்கு என் வேலை பத்தி தெரிஞ்சிருந்தது. அதனால அவரே வீட்டுல பேசி கன்வின்ஸ் பண்ணிட்டார்.
பிறகென்ன, எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருக்கு. என்னுடைய நட்பு வட்டத்துல பலரும் நான் மீடியா ஃபீல்டுலதான் யாரையாச்சும் கல்யாணம் செய்வேன்னு நினைச்சாங்க. ஆனா எனக்குத் தொடக்கத்துல இருந்தே மீடியா ஃபீல்டுல இல்லாத ஒருத்தரைத்தான் மேரேஜ் பண்ணனும்கிற விருப்பம்தான் இருந்துச்சு. என்ன காரணத்துக்காக அப்படி நினைச்சேனு தெளிவா சொல்லத் தெரியலை. ஆனா கடைசியில் நான் விருப்பப்பட்டபடியே என் கல்யாணம் நடந்திருக்கு'' என்கிற அக்ஷயாவுக்கு காதலிக்கத் தொடங்கியதும் முதல் பரிசாக வைர மோதிரம் எடுத்துத் தந்தாராம் தீபக்.
''அவர் தந்ததுல அந்த வைர மோதிரத்தை விடவும் அதிகம் பிடிச்ச ஒரு பொருளும் இருக்கு. அதை ரொம்பவே பத்திரமா வச்சிருக்கேன். அது அவர் புரப்போஸ் செய்கிறப்ப தந்த ரெட்டை ரோஜாதான். 'புரப்போஸ் பண்றப்ப எல்லாரும் பொதுவா ஒரு ரோஜாதானே தருவாங்க'னு கேட்டேன். 'ரெட்டை ரோஜா தர்றப்ப லவ் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்னு எதுலயோ படிச்சேன்'னு சொன்னார். சும்மா சொன்னாரா அல்லது அது நிஜம்தானான்னு எனக்குத் தெரியலை, ஆனா அவர் வித்தியாசமா புரப்போஸ் செய்த அந்த ஸ்டைல் எனக்குப் பிடிச்சிருந்தது. அவர் சொன்னது போலவே நாங்க சந்திச்ச ஆரம்ப நாட்களைக் காட்டிலும் எங்க லவ் இப்ப ரொம்பவே ஸ்ட்ராங்கா ஆகிடுச்சு'' எனச் சிரிக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs