முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய தம்பி வழி பேரனான வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன், தன் பாட்டி ஜானகி அம்மாளுடனான தன் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
''கோபமே வராத மனுஷி, அவங்க கெட்ட வார்த்தைப் பேசி நான் கேட்டதே இல்ல. ரொம்ப பொறுமைசாலி. அவங்க தம்பியோட முதல் பேரன் நான். எங்கம்மா ரொம்ப சின்னவங்க அப்படிங்கிறதால, நான் பிறந்த மொத ரெண்டு, மூணு வருஷம் பாட்டிதான் என்னைப் பார்த்துக்கிட்டதே. அம்மா அப்போ காலேஜ்க்கு போயிட்டிருந்தாங்களாம்.
பாட்டியை தோட்டத்தம்மான்னு நாங்க கூப்பிடுவோம். தாத்தாவை சேச்சான்னு கூப்பிடுவோம். அவர்தான் எனக்கு செல்லக்குமரன்னு பேர் வெச்சார். அதைதான் எல்லாரும் குமார்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. தாத்தா வெளியே போயிட்டு வந்தவுடனே என்னைத்தூக்கி வெச்சிப்பார். அவர் கீழே இறக்கி விட்டாலே அழ ஆரம்பிச்சிடுவேனாம் நான். இப்படியே ஒன்றரை வருஷம் அவங்களோட தான் இருந்திருக்கேன். அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு என்னைத் தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். ஆனாலும், தோட்டத்தம்மா என்னைப் பார்க்க வாரா வாரம் வந்திடுவாங்களாம். வளர்ந்துட்ட அப்புறம் சனி, ஞாயிறு வந்துட்டா நான் தோட்டத்து வீட்டுக்குப் போயிடுவேன்.
பாட்டி ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ். அந்தக் காலத்துலேயே எங்களுக்கு பால்ல சர்க்கரைப்போடாம தான் கொடுப்பாங்க. டிசிப்ளின்ல பாட்டியை யாராலும் அடிச்சிக்க முடியாது. அவங்க குடிச்ச பால் தம்ளரை அவங்கதான் கழுவி வைப்பாங்க. அதே மாதிரிதான் சாப்பிட்டத்தட்டையும். எல்லார் வீட்லேயும் லேடீஸ் இப்படித்தானே இருப்பாங்கன்னு தோணலாம். ஆனா, அவங்களோட டிசிப்ளினை எங்களுக்கும் கத்துத் தர்றதுக்காக எங்க முன்னாடியே தோட்டத்தம்மா இதையெல்லாம் செய்வாங்க. நானும் என் வயசையொத்த எங்க ரிலேட்டிவ் குழந்தைகளும் பாட்டி மாதிரியே அவங்கவங்க குடிச்ச தம்ளரை, சாப்பிட்டத்தட்டை கழுவி வெப்போம்.
தோட்டத்து வீட்ல காலையில பார்த்தா, ஒரே தலைகளா இருக்கும். அவ்ளோ கூட்டம். காலையில யாரையாவதுப்பார்த்தா 'காலை வணக்கம்'னு சொல்லணும். பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு உட்காரக்கூடாதுன்னு சொல்வார் சேச்சா. ஒருதடவை அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்க. என்னை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தது சேச்சாவும் தோட்டத்தம்மாவும்தான். இவ்ளோ பெரிய செலிபிரெட்டீஸ் நம்ம மேல இவ்ளோ பாசமா இருக்காங்கன்னு சேச்சா இறக்கிற வரைக்கும் எனக்குத் தெரியாது.
பாட்டி நல்லா செஸ் விளையாடுவாங்க. தம்பியோட (என் தாத்தா) செஸ் விளையாடுறப்போ செல்ல சண்டைங்க நிறைய போடுவாங்க. 'உனக்கு அரசியல் வேணாம். சினிமா வேணாம். அது ரெண்டும் உனக்கு நிரந்தரமா சோறு போடாது'ன்னு சொல்வாங்க. என்கிட்ட அடிக்கடி 'கல்விதான் காப்பாத்தும். சொத்தை யார் வேணும்னாலும் பறிச்சுக்கலாம். ஆனா, கல்வியை அப்படி பறிக்க முடியாது. உனக்கப்புறம் உன் சொத்துக்காக குழந்தைங்க சண்டை போட்டுக்கலாம். ஆனா, உன் கல்விக்காக போட மாட்டாங்க. நான் கத்துக்கிட்ட கலைகள்தான் எனக்கு சோறுப் போட்டுச்சு. நீயும் கத்துக்கணும்'னு சொல்லி பாட்டு கிளாஸ் அனுப்பினாங்க. நான் ரொம்ப வாலுங்கிறதால, உட்கார்ந்து பாடுறது எனக்கு ஒத்து வரலை. அந்த மாஸ்டர் மிருதங்கம் கத்துக்கொடுத்துட்டாரு எனக்கு.
ஒருமுறை கலைஞர் வீட்ல இருந்து கல்யாண பத்திரிகை வந்திருந்திச்சு. நான் அப்போ சின்னப்பையன். யாரை எப்படி குறிப்பிடணும்னு தெரியாது. 'கருணாநிதி வீட்ல இருந்து இன்விடேஷன் வந்திருக்கு பாட்டி'ன்னு சொன்னேன். பாட்டிக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு. 'அவரை நீ இப்படி சொன்னது சேச்சாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார்'னு சொன்னாங்க. 'அவரு நம்ம எனிமின்னு சொல்றாங்களே; நீங்க அவங்க வீட்டுக் கல்யாணத்துக்குப் போவீங்களா பாட்டி'ன்னு கேட்டேன். 'அண்ணா அறிவாலயத்துல கல்யாணம் வெச்சாங்கன்னா, முந்தின நாளே அவங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வந்திடுவேன்'னு பாட்டி சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு.
பாட்டிக்கு நிறைய மொழிகள் தெரியும்கிறதால தினமும் ஒரு படம் பார்ப்பாங்க. அதுக்கும் நான்தான் அவங்களோட பார்ட்னர். பாட்டி அசைவம்கூட நல்லா சமைப்பார். அவங்க வைக்கிற முட்டைக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பாட்டி தவறின அன்னிக்கு நானும் அவங்ககூட இருந்தேன். கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வான்னு சொன்னாங்க. நாலு வாய்தான் சாப்பிட்டாங்க. அதுக்கு மேல முடியலை. அவங்களுக்கு அப்போ டயாலிசஸ் நடந்துக்கிட்டு இருந்ததால, சாப்பாட்டை முழுங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நான்தான் முதுகை தடவிக்கொடுத்திட்டே இருந்தேன். உட்கார்ந்தபடியே பாட்டியோட உயிர் போயிடுச்சு'' என்கிறார் குமார் ராஜேந்திரன்.
எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல்.
தூத்துக்குடிப் பின்னணியில் விரிகிறது கதை. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து சகோதரர்களிடையே ஹார்பரில் யார் கோலோச்சுவது என்பதில் பல ஆண்டுப் பகை. அவர்களும், அவர்களின் விசுவாச அடியாட்கள் இருவரும்தான் பிரதான பாத்திரங்கள். வேட்டை நாய்கள், எஜமானர்களால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்படுபவை. ஒரு சொடக்கில் எதிரே நிற்கும் ஆளின் கழுத்துக் கண்டத்தின் சதையைக் கவ்வத் தயாராக இருப்பவை. அடியாட்கள் சமுத்திரமும் கொடிமரமும், தங்கள் எஜமானர்களின் சொடக்குக்காகக் காத்திருப்பவர்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook