பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட பணிகளுக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். அடுத்தடுத்து இரண்டாம், மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெறும். அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவடையும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் டெண்டர் சென்று நின்றுவிட்டது. சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான அறிவிப்பும் அதேநேரத்தில் வெளியானது. தொழில் நிறுவனங்கள், மக்கள் கோரிக்கை அடிப்படையில் முதலில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
தற்போது சாய்பாபா காலனி மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகள், தொழில்நிறுவனங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது.
எந்த திட்டம் அறிவித்தாலும், சிலர் அதை எதிர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். திட்டத்தை எதிர்த்து தகராறு செய்பவர்கள் அதே சாலையில் செல்கிறார்கள். விவசாயம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. நானும் விவசாயி தான். அந்த திட்டம் குறித்து விவசாயிகளை சந்தித்து தெளிவுபடுத்துவோம்.
வெளியூரில் இருந்து நீலகிரி செல்ல வேண்டும் என்றால் கோவை வழியாக செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் அவிநாசி – மேட்டுப்பாளையம் இடையே நான்கு வழிச்ச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் சுற்றுலா பயணிகள் எளிதில் ஊட்டிக்கு செல்வதுடன், கோவையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb