விஜய் டிவியில் 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் 8. நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்கள் ஆகியிருக்கும் சூழலில் இதுவரை அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் எவிக்ட் ஆகி வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் இந்த வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நேற்று காலை தொடங்கியது.
முன்னதாக எலிமினேஷன் பட்டியலில் ரஞ்சித், அருண், பவித்ரா, அன்ஷிதா உள்ளிட்டோர் இருந்தனர்.
நேற்று மாலை வரை சனிக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் நடந்த நிலையில் ரசிகர்களிடமிருந்து வந்த வாக்குகள் அடிப்படையில் நடிகை அன்ஷிதா, ரஞ்சித் இருவரும் வெளியேறலாம் எனச் சொல்லப் பட்டது. இருவரது பயண வீடியோக்களூமே தயார் நிலையில் இருந்ததால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என முதலில் தகவல் பரவியது.
ஆனால் எப்போதும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனச் சொல்லும் பிக்பாஸ் ஒரு அதிரடி டிவிஸ்ட்டாக இந்த சீசனில் இதுவரை நிகழாமல் இருந்த வைல்டு கார்டு எண்ட்ரி என்ற கார்டை கையில் எடுத்து புதிதாக ஐந்து போட்டியாளர்களை நிகழ்ச்சிக்குள் அனுப்பினார். முன்னாள் போட்டியாளர் சுஜா வருணியின் கணவர் சிவக்குமார், ராணவ், மஞ்சரி, வைஷ்ணவி வெங்கட், ரியா தியாகராஜன் ஆகிய ஐவரும் இந்த வாரம் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்கள்.
புதிதாக ஐந்து பேர் வந்திருப்பதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் டபுள் எவிக்ஷன் இல்லாத பட்சத்தில் சிங்கிள் எவிக்ஷனாவது இருக்குமென நம்பப் பட்டது. சிங்கிள் எவிக்ஷன் நிகழ்ந்து அன்ஷிதா வெளியேறியதாகவும் ஒரு தகவல் செட்டிலிருந்து கசிய விடப்பட்டது.
ஆனால் தீபாவளி சர்ப்ரைஸாக இருக்கட்டுமென நினைத்தாரோ என்னவோ நோ எவிக்ஷன் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார் பிக்பாஸ். யெஸ், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எவிக்ட் ஆகவில்லை.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி ஆன எபிசோடு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.!