சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையை சேர்ந்த ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடங்காத வெயில் கொட்டும் மழை என எதையுமே அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. காலையில் வழக்கமாக பணிக்கு கிளம்பி வருவதைப் போன்றே 'சாம்சங்' என்ற பெயர் பொறித்த சீருடையுடன் வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை என்ன? ஏன் அவர்கள் போராடுகிறார்கள். களத்தில் விகடன் சேகரித்த செய்திகள் இதோ...