BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 18 October 2024

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்திடம்,

"தமிழக ஆளுநர் பங்கேற்ற தூர்தர்ஷன் பொன்விழா ஆண்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வாசகங்கள் நீக்கப்பட்டது" குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

"தமிழக மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்தான் ஆளுநர். மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் கற்றுத் தருவதாக கூறுவது தவறு. ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்தி மொழி மட்டும்தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது கிடையாது, ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது, ஆங்கில புத்தகங்களும் கிடையாது.

அவர்களுக்கு ஆங்கில வாசகங்கள், வாக்கியங்கள் எழுதவோ படிக்கவோ தெரியாது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எந்த அரசு வந்தாலும் இரு மொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன.

தமிழகத்தில் இந்தி தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தில் தனியார் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை கற்றுத் தருகின்றனர். இந்தியை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு இங்கு தடை ஏதும் கிடையாது.

தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான் அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது. இதனை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies