இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (21-09-2024) மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, புதிய அதிபர் யார் என்பது குறித்த நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்...!
அநுர குமார திஷநாயக முன்னிலை: தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான அநுர குமார திஷநாயக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.