`கோலங்கள்' தொடர் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான காம்போ `தோழர் - தில்லா'. தோழராக `அமுதகானம்' ஆதவனும், தில்லைநாதனாக சுப்பிரமணியனும் அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார்கள்.
தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் வைரலான அந்த வெற்றிக் கூட்டணியை எக்ஸ்க்ளூசிவ் ஆக சந்தித்தோம்.
``இந்த அளவுக்கு ரீச் ஆவோம்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஜெனரேஷன் மாறிப் போச்சு. கண்டிப்பா ஹிட் ஆகும்னுலாம் நினைக்கவே இல்ல!" என அவருக்கே உரித்தான பாடிலாங்குவேஜில் பேசினார் சுப்பிரமணி. அவரைத் தொடர்ந்து பேசிய ஆதவன்,
"தோழர் கதாபாத்திரமும் சரி, ரோபோ மாதிரியான இந்த தில்லா கதாபாத்திரமும் சரி இவ்ளோ தூரம் ஹிட் ஆகும்னு டைரக்டரும், டீமும் எதிர்பார்த்து தான் எங்களை கூப்பிட்டாங்க. அவங்களுக்கு எங்க மேல இருந்த நம்பிக்கை எங்களுக்கு இல்ல. அந்த நம்பிக்கைக்கு இப்ப வெற்றி கிடைச்சிருக்கு. இது நாம எதிர்பார்க்காத உயரத்துக்குப் போகப் போகுது... லாங் லாஸ்ட் ஆக இருக்கப் போகுதுன்னு நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம். சின்ன பசங்க, பதின் பருவத்து ஆண்கள், பெண்கள்னு எல்லாருமே என்னை தோழர்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. `கோலங்கள்' தொடர் ஓடும்போது நாங்க சின்னப் பசங்களா இருந்தோம்னு சொல்றாங்க.. அப்ப சோசியல் மீடியாலாம் இல்ல. சின்னக் குழந்தையா பார்த்தவங்க இப்ப அந்த சீரியல் பற்றி பேசுறாங்க!" என்றவர்களிடம் ட்ரோல் குறித்துக் கேட்டதும் தில்லாவாகிய சுப்பிரமணி தொடர்ந்தார்.
`நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சீரியஸாகத்தான் நடிச்சோம். அது காமெடியாகவும் ஒர்க் அவுட் ஆகிடுச்சு!" என்றதும், `இது கலை உலகம் இதுவரைக்கும் காணாத விஷயம்'னு இடைமறித்தார் ஆதவன். ஆம் எனத் தலையசைத்துவிட்டு தொடர்ந்தார் தில்லா.
"நான் இந்தத் துறையே கிடையாது. விருதுநகரில் ராம்கோ சிமெண்ட் கம்பெனியில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்த்துட்டு இருந்தவன். எனக்கு கோலங்கள் சீரியலுக்கு முன்னாடி திருச்செல்வம் சார் யாருன்னே தெரியாது. நான் சீரியலெல்லாம் ட்ரை பண்ணவும் இல்ல. டைரக்டர் சூர்யபிரகாஷ் வீட்டுக்கு என் நண்பர் ஒருவரோட போயிருந்தேன். அங்க திருச்செல்வம் சார் இருந்திருக்கார். அங்க சீரியல் ஆரம்பிக்கறதுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி என்னை பார்த்திருக்கார். பிறகு, அவர் டீம்கிட்ட சொல்லி அவங்க `கோலங்கள்'னு ஒரு சீரியல் போயிட்டு இருக்கு... சார் உங்களை வரச் சொன்னார்னு சொல்லவும் `தப்பான ஆளுக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க'னு சொல்லி வச்சிட்டேன். தொடர்ந்து பேசவும் மரியாதைக்காக அவரை மீட் பண்ண சென்னை வந்தேன். அவர் நேரில் பார்த்ததும் ரொம்ப நாள் பழகின மாதிரி பேசி அந்தக் கேரக்டர் சொல்லி என்னை நடிக்கச் சொன்னார். போலீஸ் கேரக்டர் நான் தான் பண்ணனும்னுலாம் இல்ல. வேற ஒருத்தர் கூட பண்ணியிருக்க முடியும். ஆனா, அவர் நான் தான் அந்தக் கேரக்டர் பண்ணனும்னு உறுதியா இருந்தார். இந்த பாடிலாங்குவேஜ் உங்களுக்கு செட்டாகுதுன்னு சொன்னதும் அவர் தான். அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும்!" என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து இருவரும் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!