இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அமரன் பாடல்கள் !
இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'அமரன்' அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்த முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகிது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'ஹே மின்னலே' பாடல் கூடிய விரைவிலும் வெளியாகும் என்பதை படக்குழுவும் அறிவித்திருந்தது.
'அமரன்' தொடர்பாக ஜி.வி, " இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கின்றன. நான் படத்தை பார்த்தப் பிறகு கூடுதலாக இரண்டு பாடல்களை தயார் செய்தேன். இது ஒரு முழுமையாக ஆக்ஷன் திரைப்படம். இசையும் அதே போல சீரியஸ் வடிவில்தான் இருக்கும். மற்றொரு பக்கம் நாஸ்டால்ஜிய கிளாசிக் காதல் காட்சிகளும் இருக்கிறது. அதுவும் 'மே மின்னல்' பாடல் மூன்று நாள்களில் வெளியாகும்." என சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
'குடும்பஸ்தன்' மணிகன்டன்!
'குட் நைட்', 'லவ்வர்' என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்த மணி கன்டனின் அடுத்த ரிலீஸ் 'குடும்பஸ்தன். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு நேற்று வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சுயாதீன இசைக் கலைஞராக அறிமுகமாகி வைப் ஹிட்களை அடுக்கின வைக்சாக் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார்.
'தனுஷ் படத்தில் நடிக்கவில்லை' - அசோக் செல்வன்!
தனுஷ் தன்னுடைய அடுத்த டைரக்ஷன் படத்தை தொடங்கிவிட்டார். இத்திரைப்படத்திற்கு 'இட்லி கடை' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய், அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இப்படியான தகவல்களுக்கு பதில் கொடுத்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அசோக் செல்வன், " எனக்கு தனுஷ் சாரை பிடிக்கும். நான் அவரின் ரசிகனும்கூட. அவருடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் தற்போது 'இட்லி கடை' படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை மட்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்!" எனக் கூறியிருக்கிறார்.
பகத் பாசிலுக்கு அடுத்தடுத்த ரிலீஸ்!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கிற 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஒரு பொழுதுக்கான கதாபாத்திரத்தை பகத் ஏற்று நடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி, அக்டோபர் 17-ம் தேதி பகத் பாசிலும் மற்றுமொரு திரைப்படமும் வெளியாகிறது. 'பீஷ்ம பர்வம்', 'காம்ரேட் இன் அமெரிக்கா' போன்ற திரைப்படங்களின் இயக்குநரான அமல் நீரத் இயக்கியிருக்கும் 'போகைன்விலியா' திரைப்படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் குன்சாக்கோ போபனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர்கள்!
'லப்பர் பந்து' திரைப்படத்தைப் பாராட்டி கிரிக்கெட் வீரர் அஷ்வின் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது ஹர்பஜன் சிங்கும் அப்படத்தை பாராட்டியிருக்கிறார். 'லப்பர் பந்து' பற்றி அவர், "என்னோட அடுத்த தமிழ் டைரக்ஷன் டீம், "சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு. கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு" சொன்னாங்க . `கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா!' என தமிழிலேயே பதிவிட்டு 'லப்பர் பந்து' படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...