தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம், அய்லாபூர் முன்னாள் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மமிதாலா நரசிம்லு. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருடன் நரசிம்முலுவின் முதல் மனைவி இருந்து கவனித்துக்கொண்டார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி நரசிம்லு உயிரிழந்தார். அவரின் உடல் ஐதராபாத்திலிருந்து, முதல் மனைவியின் ஊரான கொருட்லாவுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதற்கிடையில், நரசிம்லு இறந்த செய்தியறிந்த அவருடைய இரண்டாவது மனைவி, அவருடைய சடலத்தைப் பார்ப்பதற்காக நரசிம்லுவின் உடல் இருக்கும் முதல் மனைவியின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, "என் புருஷன் சொத்துல எனக்கு பாதி கொடுக்கனும்..." என பேசத் தொடங்க, இது அப்படியே விவாதமானது. ஒருகட்டத்தில் இரண்டு மனைவிகளுக்கு மத்தியில் சொத்து தகராறாக வெடித்தது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட மோதலை கண்ட கிராமப் பெரியவர்களும், உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் இறுதிச் சடங்கை தடுத்து நிறுத்தினர்.
கணவரின் சொத்து பங்கு பிரிக்க வேண்டும் என இருவரும் தாசில்தார் அலுவலகம் புறப்பட்டனர். பின்னர் உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் தலையீட்டில், இரண்டாம் மனைவிக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பிறகும், இரண்டாம் மனைவி, ''சொத்து என் பெயரில் ரிஜிஸ்டர் செய்யாம சடலத்தை எடுக்க விடமாட்டேன்" என மீண்டும் மோதலை தொடர்ந்தார்.
இதையடுத்து உறவினர்கள் நரசிம்முலுவின் உடலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்தனர். மேலும், இரு மனைவிகளும் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, மூன்று ஏக்கர் விவசாய நிலம் இரண்டாம் மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக எழுதி கொடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரே, இரண்டாம் மனைவி இறுதிச் சடங்கை தொடர அனுமதித்தார். இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY