சின்னத்திரையின் வெளிச்சத்தில், வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடிகர் விஜயின் 'கோட்' திரைப்படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் நடித்திருந்தார். அதில், வில்லனை சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் ஒப்படைக்கும் காட்சியில், ``இதைவிட பெரிய வேலைக்கு போறிங்கனு நினைக்கிறேன். இனி இதை நான் பாத்துக்குறேன்" எனப் பேசும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்தக் காட்சியின் மூலம், நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால், அவருடைய ``தளபதி" என்ற இடத்துக்கு சிவக்கார்த்திகேயன்தான் என சூசகமாகக் குறிப்பிடுவதாகப் பலரும் எழுதிவந்தனர். இந்த நிலையில், "ரங்கூன்" என்கின்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் "அமரன்" திரைப்படம் திரைக்கு வரத் தாயாராக இருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில், ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, 'அடுத்த தளபதி நீங்கள் தான்' என்று கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு நன்றி.
அடுத்த தளபதி என்றெலாம் கிடையாது... தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரே ஒரு தளபதி தான், ஒரே ஒரு தல தான், ஒரே ஒரு உலகநாயகன் தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அவர்களுடைய நடிப்பை பார்த்து சினிமாவைக் கற்றுக் கொண்டவன் நான். அவர்களைப் போல கடினமாக உழைத்து, அவர்களைப் போல நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே ஆக நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு" எனப் பேசினார். தற்போது அவர் பேசிய அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...