பி.சி.சி.ஐ முன்னாள் செயலாளரான, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 35 வயதான மகன் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்த, என்னால் முடிந்த அனைத்தையும் உறுதியாக செய்வேன். இந்த முக்கியப் பொறுப்பை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், கிரிக்கெட் விளையாட்டிற்காகவும் அர்ப்பணிப்பேன். 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தனது வரலாற்று அறிமுகத்தை செய்ய தயாராக உள்ளது. இந்த தருணம் ஒரு மைல்கல் மட்டுமல்ல, இந்த அற்புதமான விளையாட்டில் ஈடுபட்டுள்ள நம் அனைவருக்குமான நம்பிக்கை. இதுபோன்ற ஒரு அற்புதமான காலகட்டத்தில் ஐசிசி-யை வழிநடத்துவது எனது பாக்கியம்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஜெய் ஷா-வின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாந்து. இது தொடர்பாக வெளியான செய்தியில், பி.சி.சி.ஐ நிர்வாகிகளுக்கு மாதாந்திர சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால், தினசரி கொடுப்பனவு படியாக, வெளிநாட்டில் சந்திப்புகள் நடந்தால் ஒரு நாளைக்கு ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், டிசம்பர் 1 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்கவிருக்கும், அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிகர சொத்து மதிப்பு, ரூ.124 கோடி எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெய் ஷாவுக்கு கிரிக்கெட்லிருந்து பெற்ற வருமானத்தைத் தவிர, விவசாயப் பொருட்களின் இறக்குமதி - ஏற்றுமதி நிறுவனமான டெம்பிள் எண்டர்பிரைஸில் இயக்குநராகவும் பொறுப்பில் இருந்தார். குசும் ஃபின்சர்வ் நிறுவனத்தில் அவர் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார் என்ற தகவலும் தெரியவந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88