திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரின் நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம். இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாகப் பார்க்க வேண்டும்.
மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறார் பிரதமர் மோடி. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளது. சுதந்திர தின விழா அன்று ஆளுநரின் தேநீர் விருந்து என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகும். ஆண்டுதோறும் அழைப்பு விடுக்கப்படும். அதன் அடிப்படையில் இந்த முறையும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை தமிழக முதல்வர் கலந்து கொண்டார். நாங்களும் அதேபோல்தான் கலந்து கொண்டோம்.
இதில் அரசியல் எதுவுமில்லை. கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே வேல் யாத்திரை நடத்தப்பட்டது. முத்தமிழ் முருகன் மாநாடு தி.மு.கவால் நடத்தப்படுகிறது. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மெட்ரோ திட்டத்திற்கான முறையான ஆவணங்களை தமிழக அரசு வழங்கிய பின்னர் நிதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க விவகாரத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாதுகாப்புச் சுற்றறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88