இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.
இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.
பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.