தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது முயற்சியாலும் தனது லட்சியத்தாலும் இன்று பிரபல நடிகையாக இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
முதன் முதலில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் வெகு சீக்கிரத்திலேயே அவருக்கு சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
பிரியா பவானி ஷங்கர்:
சீரியலில் பக்காவான பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். கல்யாண முதல் காதல் வரை தொடரில் நடித்து ஒட்டுமொத்த இல்ல தரிசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதை அடுத்து உடனடியாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. அதை கணக்கச்சிதமாக பயன்படுத்த துவங்கினார் பிரியா பவானி சங்கர் .
முதல் படமான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக எந்த ஒரு படத்தையும் அவ்வளவாக சொல்ல முடியவில்லை.
ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள்:
இருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் ஜிப்ரான், டிமான்டி காலனி 2 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளது.
இந்த திரைப்படங்களின் ரிலீசுக்காக அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜெயம் ரவி , சூர்யா, எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.அண்மையில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படங்கள் எதுவும் அவ்வளவாக மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்ததாக சொல்ல முடியவில்லை .
சுமாரான வரவேற்பு பெற்று இருந்தாலும் அடுத்தடுத்த அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதனிடையே சினிமாவையும் தாண்டி அவர் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.
ஆம், “லைன் டைனர்” என்று ஒரு ஹோட்டலை அண்மையில் சென்னையில் தொடங்கியிருந்தார். இதன் மூலம் அவர் புதிய பிசினஸை தொடங்கி கணிசமான வருமானத்தையும் பார்த்து வருகிறார்.
இது தன் காதலனுக்காக வைக்கப்பட்ட ஹோட்டல் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தொடர்ந்து திரைப்படம் பிசினஸ் என பிஸியாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் லிப்லா காட்சிகளில் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது என மனம் திறந்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அவருடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை:
அதாவது கதைக்கு தேவைப்பட்டால் நான் லிப் லாக் காட்சியில் கூட நடிப்பின். அதிலும் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் தான்.
அவருடன் லிப் லாக் காட்சியில் நடிக்கணும் அப்படிங்கறது என்னோட நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார். இதனிடையே பிரியா பவானி சங்கர் பொம்மை திரைப்படத்தில் நடித்தார்.
அப்போது போது அப்படத்தின் ஹீரோவான எஸ் ஜே சூர்யாவுக்கு லிப்லா கொடுத்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர்கள் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு செய்தியாக வெளியானதும் கூடுதல் தகவல்.