BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 28 May 2024

அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல.. கஷ்டமா இருக்கு.. கணவரை பிரிந்த பிரியாங்கா உருக்கம்..!

இவர் அறிமுகமான புதிதிலே தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டார்.



VJ பிரியங்கா:

கலகலப்பான பேச்சு காமெடி யதார்த்தம் உள்ளிட்டவற்றால் பிரியங்கா மிகவும் நெருக்கமாக மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

குறிப்பாக யார் ஒருவரையும் அவர் முகம் சுளிக்க வைக்காமல் மனம் வலிக்கும்படியாக பேசவே மாட்டார். தன்னைத்தானே இழிவு படுத்திக் கொண்டு கூட காமெடி செய்வாரே தவிர அடுத்தவர்களை மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்.

மேலும் ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி,சூர்ய வணக்கம் ,இசை போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியும் பிரபலமாக இருக்கிறார் .

தொகுப்பாளினியாக கலக்கிய பிரியங்கா:

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு அதிலும் தனது திறமையும் வெளிப்படுத்தி மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் வருவதற்கு முன்னர் ஜீ தமிழ் ,சன் டிவி, சுட்டி டிவி ,சன் மியூசிக், ஸ்டார் விஜய், போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்னவோ விஜய் டிவி தான். இதனால் பலமுறை பல பேட்டிகளில் கூட தனக்கு மாகாபா தான் வாழ்க்கை கொடுத்ததாக கூறியுள்ளார்.

அவர் கொடுத்த சிபாரிசின் பெயரில் தான் நான் இந்த அளவுக்கு இருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் என மாகாபாவை குறித்து மிகப் பெருமையாகவும் நன்றி உணர்வோடும் பேசியிருக்கிறார்.

இதனிடையே சொந்தமாக Youtube சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் பல்வேறு விதமான சமையல் வீடியோக்கள் மற்றும் டிராவல் வீடியோக்கள் வெளியிட்டு கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார்.

காதல் திருமணம், விவாகரத்து:

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த பிரியங்கா தேஷ் பாண்டேவுக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இதை பிரியங்கா எந்த ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக கூறியது இல்லை இது ஒரு வதந்தி செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்தது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை பிரிந்ததை மறைமுகமாகவும் மீண்டும் மறுமணம் செய்து வைக்க அவரது அம்மாவின் விருப்பப்படுவதாகவும் மறைமுகமாக கூறி மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது பிஜேபி பிரியங்கா தன்னுடைய தம்பி மகளை பற்றி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது என்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்திருக்கிறது அவர்தான் என்னுடைய ஒட்டுமொத்த உலகமும் என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல:

அத்தை என்ற உறவை தாண்டி அவள் மீது நிறைய அன்பு நான் வைத்திருக்கிறேன். நான் இப்போ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்போ எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு இரண்டு மடங்கு நான் அன்பை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

அவள் என்ன கேட்டாலும் நான் அவளுக்காக செய்ய தயாராக இருக்கிறேன். அவள்தான் என் உலகமே எனக் கூறி ஒரு அத்தையாக மிகவும் எமோஷ்னலாக பேசினார்.

அது மட்டும் இல்லாமல் பிரியங்காவின் இந்த பதிலை கேட்ட விஜே அர்ச்சனா, நிச்சயம் நீ விரும்பும் படி காதலர் அமைவார்.

நீ நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் எனக் கூற உடனே பிரியங்கா கண்கலங்கி அழுதுவிட்டார்.

இந்த எமோஷ்னலான வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரியங்காவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies