இந்தியாவின் அடிப்படை பொரு ளாதாரம் பலமாக உள்ளது. நிச்சயமற்ற சூழலை எதிர் கொள்ளத் தயாராக உள்ளோம். ஆனால் வங்கிகளின் வாராக்கடன் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக் கல்லாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத் தன்மை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆறாவது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அதில், பொருளாதார மேம்பாடு சிறப்பாக உள்ளது. வரும் காலத்திலும் சிறப்பாக இருக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. தொழில் புரிவதற்கான சூழ்நிலை மேம்பட்டிருந்தாலும் முழுமையாக எளிதாகவில்லை என்று ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.
பேரியல் பொருளாதார குறியீடுகளான வளர்ச்சி, பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை ஆகியவை ஓரளவுக்கு மேம்பட் டிருக்கிறது. ஆனால் கடந்த மார்ச் மாத நிலவரப்படி வங்கிகளின் மொத்த வாராக்கடன் 4.6 சதவிகிதமாக உள்ளது. செப்டம்பர் 2014-ல் மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்து 4.5 சதவீதமாக இருந்தது. அதேபோல கடனை மறுசீரமைப்பு செய்யும் விகிதமும் அதிகரித்தது.
வாராக்கடன் அதிகரிக்கும் விகிதம் இன்னும் குறையவில்லை. இன்னும் சில காலாண்டுகளுக்கு இதே நிலைமை நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
துறை வாரியாக பார்க்கும் போது சுரங்கம், ஸ்டீல், டெக்ஸ்டைல், கட்டுமானம், விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் அதிக வாராக்கடன் உள்ளது.
ஒருவேளை இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் சரியில் லை என்றால் 2016 மார்ச் காலத் தில் வங்கிகளின் மொத்த வாராக் கடன் 5.9 சதவீதமாக கூட அதி கரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மொத்த வாராக்கடன்களில் பொதுத்துறை வங்கிகளில் அதிகம் உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கொடுத்திருக்கும் கடன்களில் 13.5 சதவீத கடன்கள் சிக்கலில் உள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் கொடுத் திருக்கும் கடன்களில் 4.6 சதவீதம் மட்டுமே சிக்கலில் உள்ளன.
வாராக்கடன் அதிகரிக்கும் போது மூலதன தன்னிறைவு விகிதத்தை எட்டுவதில் பிரச்சினை இருக்கும். நிதி ஸ்திரத் தன்மையை உயர்த்த புதுமைகள் அவசியம் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி நடப்பாண்டில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் செய்யப்பட்ட அந்நிய நிறுவன முதலீடு வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம்.
அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் சர்வதேச சந்தையிலும் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். அந்த ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ள இந்தியா தயராக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை தெரிவிக்கிறது.