கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் உருவான படம் ‘என்னை அறிந்தால்’. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் டீஸர் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 73,000 லைக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு இந்திய அளவில் அதிகமாக 61,000 லைக்குகள் பெற்ற டீஸராக, ஹ்ருத்திக் ரோஷனின் ‘பேங் பேங்’ பட டீஸர் மட்டுமே இருந்து வந்தது. இதே போல் ‘கிக்’ 1 லட்சம், மற்றும் ‘க்ரிஷ் 3’ 71 ஆயிரம் பெற்றாலும் அது அதிகாரப்பூர்வ டீஸராக இல்லாமல் தியேட்டர் டிரெய்லராகவே இருப்பதால். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ முதலிடத்தில் பதிவாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற வார்த்தை டிரெண்டாகும் அளவிற்கு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.