சென்னை: முதலிரவு காட்சியில் நடிக்க நடிகை ஸ்ரீதிவ்யா தயங்கியதால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம், ‘வெள்ளக்கார துரை’. எழில் இயக்கும் இந்தப் படத்தை அன்புசெழியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டில் விஷால், கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எம்.ரத்னம், சுபாஷ் சந்திரபோஸ், விஜய் ஆண்டனி கலந்துகொண்டனர். அப்போது நிருபர்களிடம் ஸ்ரீதிவ்யா கூறும்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜீவா’ படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்தேன். இதில், விக்ரம் பிரபுவுடன் முதலிரவு காட்சியில் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னார். எனக்கு தயக்கமாக இருந்தது. அப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்று பயந்தேன். ஆனால், கிளாமர் தேவையில்லை என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார். வழக்கமாக இதுபோன்ற காட்சியில், ஹீரோயினை கிளாமராக காட்டுவார்கள். இதில் நாகரீகமாக காட்டியிருக்கிறார்கள்’ என்றார்.விக்ரம் பிரபு பேசும்போது, ‘முதல்முறையாக நகைச்சுவை கலந்த நாயகனாக நடித்திருக்கிறேன். இதில் நடித்தது எனக்கே வித்தியாசமாக இருந்தது’ என்றார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி எழுதியுள்ளனர்.