பிரதமர் நரேந்திர மோடி சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை நேபாளம் செல்கிறார். 18-வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. இம்மாநாட்டில் சார்க் உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை காத்மாண்டு புறப்பட்டு செல்கிறார்.