உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020ம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து கூறும் போது உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும் சீனா நடுத்தர, இடை நிலை மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட 250 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.