"இந்திய-சீன எல்லைப் பிரச்னையைத் தீர்க்க போதிய அவகாசம் தேவை' என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லீ யுசெங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ரூ. 1.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீனாவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்கு 24 மணி நேரம் மின்சாரமும் கிடைக்க வாய்ப்புள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பாதையைத் திறக்க அண்மையில் சீனா ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இப்பாதை செயல்படத் தொடங்கும் என்று லீ யுசெங் தெரிவித்தார்.