முருங்கைக் கீரை மொ ரிங்கா! நம்மூரில் 'முர்ரேங்க்கா' என்று கடைத் தெருவில் கூவி விற்கப்படும் முருங்கை மரத்துக் கீரையின் அறிவியல் பெயர் இது. ஆண்மை விருத்திக்கான கீரை என்றே ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கீரையில், அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள் கலர் கலராக விழுங்கிக்கொண்டு இருக்கும் எல்லா மாத்திரைகளையும் ஓரங்கட்டும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது முருங்கைக் கீரை. முருங்கை, முந்நூறு வகையான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உடையது என்று சான்றிதழ் தருகிறது இயற்கை மருத்துவம். நவீன மருத்துவமும் இதை ஒப்புக்கொள்கிறது. ‘நம் உடலுக்கு இது ஒரு பவர் ஹவுஸ்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஆரஞ்சுப் பழத்தில் உள்ளது போல ஏழு மடங்கு வைட்டமின் C, பாலில் உள்ளது போல நாலு மடங்கு கால்ஷியம், இரண்டு மடங்கு புரோட்டீன், கேரட்டில் உள்ளது போல நாலு மடங்கு வைட்டமின் ஏ, வாழைப்பழத்தில் உள்ளது.