குதிரையும் காண்டாமிருகமும் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றின என்று அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் நடத்திய ஆய்வின்போது, "கேம்பேதீரியம் தெவிஸ்ஸி' என்கிற அதிகம் அறியப்படாத விலங்கினத்தின் 200-க்கும் மேற்பட்ட எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் காலம் 5.45 கோடி ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விலங்கினத்தின் பற்கள், முதுகுத் தண்டு, கால்கள் ஆகியவை, காலத்தால் முற்பட்ட "பெரிúஸாடாக்டைலா' என்கிற விலங்கினத்தைப் போன்றதாக உள்ளது."பெரிúஸாடாக்டைலா' வகையைச் சேர்ந்ததுதான் குதிரை, காண்டாமிருகம் ஆகியவை. இவற்றின் செரிமான உறுப்புகள் தனித்துவம் மிக்கவை. மேலும், இந்த வகை விலங்குகளின் பின் கால்களில் நகங்களின் எண்ணிக்கை ஒரே போல் இல்லாமல், மாறுபட்டிருக்கும்.இந்த "பெரிúஸாடாக்டைலா' வகை விலங்குகளின் பரிணாமத்தில் உருவாகிய "கேம்பேதீரியம்' வகை விலங்குகளின் எலும்புகள், பற்களின் படிமங்கள் மகாராஷ்டிரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவற்றுக்கு குதிரை, காண்டாமிருகம் இனங்களிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது."பெரிúஸாடாக்டைலா' வகையைச் சேர்ந்த விலங்கோடு தொடர்புடைய மற்றொரு இனத்தின் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.1990-ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில், குதிரை, குரங்கு உள்ளிட்ட பல விலங்கினங்கள் இந்திய நிலப்பகுதியில் தோன்றியிருக்கக் கூடுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நிலப்பகுதி ஒரு தீவாக இருந்திருக்கக் கூடும். அரபு தீபகற்பம் அல்லது ஆப்பிரிக்க நிலப்பகுதியின் தென் பகுதியையொட்டி இந்திய நிலப்பகுதி கடந்தபோது, சில விலங்கினங்கள் இடம் பெயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது."கேம்பேதீரியம்' இனமானது மிகவும் மாறுபட்டதாக இருப்பதிலிருந்தே, இந்திய நிலப்பகுதி, தனிமைப்பட்டு, ஒரு தீவாக இருந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.கேம்பேதீரியம் இன விலங்குகளின் படிமங்கள் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து, இந்திய நிலப்பகுதி முற்காலத்தில் தீவாக இருந்ததற்கும் சான்று கிடைத்துள்ளது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கென் ரோஸ் எனும் பரிணாம இயல் விஞ்ஞானி தெரிவித்தார்.இந்த ஆராய்ச்சி விவரங்கள் "நேச்சர் கம்யூனிகேஷன்' ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.கேம்பேதீரியம்' இன விலங்கு } ஓவியரின் கற்பனை.