பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ மனதின் குரல் என்ற பெயரில் இன்று ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரையாற்றுகிறார். இன்று காலை 11 மணிக்கு அனைத்து வானொலி நிலையங்களிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பாகிறது. இதன் தமிழாக்கம் இரவு 8 மணிக்கு தமிழகத்தில் உள்ள அகில இந்ந்திய வானொலியின் அனைத்து நிலையங்களிலும் ஒலிபரப்பாகும். முன்னதாக கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக வானொலியில் உரையாடினார். அப்போது அவர் மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்கள் அனைவரையும் வானொலி வழியாக தொடர்பு கொள்வதாகவும் தன் மனதின் வார்த்தைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நவம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் வானொலியில் உரையாற்றுகிறார்.