சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சூர்யா , ஜோதிகா, பூமிகாவை கூட நாம் மறந்து விடுவோம். ஆனால் சூர்யா ஜோதிகா ஜோடியின் குழந்தையாக நடித்த ஷ்ரியா ஷர்மாவை மறந்து விட முடியாது. அந்தளவுக்கு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். அதன் பிறகு எந்திரன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த போது அவளுக்கு வயது 13 ஆகும். சென்னை சில்க்ஸ், ரஸ்னா , காம்பிளான் உள்ளிட்ட பல விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுக ஆக உள்ளார். காயக்கடு என்னும் படத்தில் நடித்து வருகிறார்.