உங்கள் பெயரை செவ்வாய் கிரகத்தில் பொறிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?? அதற்காக நாசா விண்வெளி மையம் அருமையான வாய்ப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது . செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஓரியான் விண்கலத்தில் , உங்கள் பெயரையும் சேர்த்து அனுப்பிவிடலாம் . இந்த விண்கலம் டிசம்பர் 4 ஆம் தேதி கிளம்ப இருக்கிறது .
உங்கள் பெயரையும் பொறிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் இணையதளத்திற்கு சென்று , சில அடிப்படை தகவல்களை நிரப்பிய பின் சப்மிட் கொடுத்தால் , உங்கள் பெயரையும் பட்டியலில் சேர்த்துவிடுவர் . இதுவரை 95,000 மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் .
இதனை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 31 .