இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாக தெரிகிறது . இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது தொடர்பாக கோஹ்லியின் தாய் அனுஷ்கா சர்மா வீட்டினரை பார்த்து பேசி விட்டார் என்றும் கூறுகிறார்கள் .
இந்த சந்திப்பு தான் இது போன்ற செய்திகள் பரவுவதற்கு காரணம் . இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர் . ஆனாலி இது குறித்து இருவரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை .