- இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
- இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்.
- மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
- குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
- ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
- குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.
- குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்.
- குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்.
- குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.