தீபாவளி விழா வந்துவிட்டது. கடந்த வெள்ளிகிழமையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். வெள்ளிகிழமையில் இருந்து இந்த வாரம் ஞாயிற்றுகிழமை திரும்பி செல்வதற்கு வரை சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது பேருந்தில் மட்டும் ஆகும். இதற்காக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வரை அதிக கூட்டம் வரவில்லை. இன்று மற்றும் நாளையும் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த அதிக அளவு போக்குவரட்த்து அதிகாரிகளை நியமித்து உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் ரிசர்வ் செய்யாமல் தினமும் 10 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த முறை அதிக மக்கள் இணையம் வழியாக தான் முன்பதிவு செய்துள்ளார்கள். இணையத்தை எல்லா மக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பதை இது தெளீவாக காட்டுகிறது.