அடுத்த கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து 2 உலக கோப்பைகளை பெற்று தந்தவர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்த இரண்டு அணிகளும் மோதினால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என பாண்டிங் நினைக்கிறார். சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுவதால் கிளார்க் கட்டாயம் சாம்பியன் பட்டத்தை வென்று தருவார் என கூறுகிறார். 50 ஒவர் போட்டிகளில் அதிரடி ஆட்டகாரர்கள் ஆட்டத்தை மாற்றுவர்களா இருப்பார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு டெவிட் வார்னர் இருப்பார் என பாண்டிங் கூறினார். உலக கோப்பை எப்போது வருமோ என எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகிவிட்டது.