2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து உடனான தொடரின் போது கங்குலியின் தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதும் இந்திய கேப்டன் கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.இந்த வெற்றி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. அனைவருக்கும் கங்குலி என்றாலே இந்த வெற்றி கொண்டாட்டம் தான் நியாபத்துக்கு வரும். அதனாலே அவருக்கு பல ரசிகர்கள் சேர்ந்தார்கள். இன்று கூகுளில் சென்று லார்ட்ஸ் மைதானம் என டைப் செய்தால் கங்குலி தனது சட்டையை அவிழ்க்கும் போட்டோ வரும்.
தனது இந்த செயல் தவறானது என 12 ஆண்டுகள் கழித்து கங்குலி கூறியுள்ளார். நம்மிடம் பல திறமைகள் உள்ளது ஆனால் அவை எல்லாம் முடங்கி கிடக்கிறது. ஆக்ரோஷமாக செயல்பட்டால் தான் அந்த திறமை வெளிப்படும் என நம்பினேன். அதனால் தான் ஆக்ரோஷமாக செயல்பட்டேன். நெருக்கடியில் இருந்து விடுபட்ட வேகத்தில் வெற்றியை அவ்வாறு கொண்டாடிவிட்டேன் . அது இப்போது தவறு என உணர்கிறேன் என்றார் சவுரவ் கங்குலி.