ரஜினிக்கு என தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எல்லாரும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர் எப்பொழுதும் போல் எந்த கருத்தும் சொல்லாமல் தவிர்த்து வந்தார். அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்கிறாரோ அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ரஜினி நல்ல குணமும் கொண்டவர். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வார்.
அவரை பாஜகவில் சேர்த்து 2016 தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்னும் முடிவில் இருந்தது பாஜக. பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. ரஜினியும் சேர்ந்தால் அவர்களால் கட்டாயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அதில் புதிய பிரச்சனை வந்துவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருட சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். அவர் வெளியே வந்ததற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ஏன் ஊழல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படியெனில் அவர் பதவிக்கு வந்தாலும் ஊழலுக்கு ஆதரவாக தான் செயல்படுவாரா என மக்கள் நினைப்பார்கள். எனவே ரஜினி தேவையில்லாத இந்த வாழ்த்தை தவிர்த்து இருக்கலாம். இனியாவது சரியாக நடந்து கொள்ளட்டும்.