யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என புதிய முறை தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேட்பாளர்களில் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் பலரால் வாக்களிக்காமல் இருந்து விடுகிரார்கள். அவர்களது வாக்கு வீணாகி விடுகிறது. அல்லது அதனை கள்ள ஒட்டுக்கு பயன்படுத்தி விடுகிறார்கள். இதனை தடுக்கவே 49-0 என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது சரியாகவில்லை என்பதால் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அது சிறிது சிறிதாக ஆதரவு அதிகரித்து வந்தது. நடந்து முடிந்த மஹாராஷ்டிரா ஹரியானா தேர்தலில் அதிகளவிலான மக்கள் நோட்டாவை தேர்தெடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் 4,60,741 வாக்காளர்களும், ஹரியானாவில்53,381 வாக்காளர்களும் நோட்டாவை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.