தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்க விரும்புவோர் இன்று முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 64 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், விண்ணப்பங்களை பதிவு செய்யலாம், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் புதிய வாக்காளர்களுக்கு அதே மாதம் 25ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பிரவீண் குமார் தெரிவித்தார்.