பாஜக வின் நீண்ட நாள் கூட்டாளியான சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி முறிந்து மகாராஷ்டிராவில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன, மராட்டிய மாநிலத்தில் பால்தாக்ரே கட்சிகளை கடந்த தனிப்பெரும் தலைவராக விளங்குகிறார், அவர் இறந்து போனாலும் அவர் மீதான விமர்சனத்தை மராட்டியர்களால் தாங்க முடியாது.
இன்று பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், சாங்லி மாவட்டத்தின் டாஸ்கான் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவசேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன் என்றார்.