இந்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் அரவிந்த் சுப்ரமணியன் நேற்று பதவியேற்றார்.மத்திய நிதித்துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், கடந்த செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அந்த முக்கிய பணியிடம் காலியாக இருந்து வந்தது. அந்த இடத்திற்கு, அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். நேற்று பதவியேற்றுக் கொண்ட அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். மாற்றங்களை கொண்டு வர செயல்பட்டு வரும் அரசுடன் இணைந்து செயலாற்ற எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறினார்.