தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோல் கே.கே. நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது. மழையால் சாலைகள் சேதமடைந்து வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.