உலகம் முழுவதும், 120 கோடி பேர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் (ரூ.77) குறைவாக வருவாய் ஈட்டுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் 1.25 டாலருக்கும் குறைவான வருவாய் உடையவர்கள் 120 கோடி பேர் உள்ளனர். 2 டாலருக்கும் (ரூ.123) குறைவாக 240 கோடி பேர் வருவாய் ஈட்டுகின்றனர்.கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆண் ஆண்டு வரை 70 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.2008-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கிய பிறகு, ஏழை-பணக்காரர்களிடையேயான ஏற்றத்தாழ்வு எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.