ஹைதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்னும் சிறுவன் பத்து வயதில் போலிஸ் கமிஷ்னராக பணியேற்று நாட்டில் மிக இளம் வயதில் போலிஸ் கமிஷ்னர் என்ற சாதனையைப் படைத்துள்ளான் . இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார் . இவரின் சிறுவயது ஆசை போலிஸ் கமிஷ்னர் ஆவது . இவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக மேக் எ விஷ் என்னும் தொண்டு நிறுவனமும் காவல் துறை அதிகாரிகளும் எடுத்த முயற்சி தான் இது . போலிஸ் கமிஷ்னர் மகேந்தர் ரெட்டி இந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தார் .
சாதிக் தனது குரலில் நான் ரவுடிகளை பிடிக்க வேண்டும் என்று கூறிய பின் அவருக்கு மற்ற போலிஸ் அதிகாரிகள் சல்யுட் அடித்தனர் . இவர் பதவியேற்கும் போது மற்ற அதிகாரிகளுக்கு என்ன முறை பின்பற்றப் படுமோ அதேப் போன்று இவருக்கும் செய்தனர் .
சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு ஒரு ராயல் சல்யுட் !!