சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும் அவரை பார்ப்பதற்கு என வந்து கொண்டே இருக்கிறார்கள். அமைச்சர்கள், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் என பலர் வருகிறார்கள். ஆனால் யாரையும் பார்ப்பதற்கு அனுமதி தரப்படுவதில்லை.
அதோடு அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருகிறார்கள், மாநில அரசால் இவர்களை கட்டுபடுத்த முடியவில்லை. காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டதால் இப்போது கர்நாடக அரசு ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. இதனை கர்நாடக அரசு விரும்பவில்லை. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என பயப்படுகிறது. அதனால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வருகிறது.