இந்தியாவின் மக்கள் தொகைக்கும் சீனாவின் மக்கள் தொகைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் விளையாட்டு என்று வரும் போது பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடிப்பதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்தியாவோ ஒரு தங்கப்பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்து வருகிறது. ஏன் 125 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இல்லையா, நாம் ஏன் தடுமாறுகிறோம். நம்மை விட சீனா சிறந்து விளங்குவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
* அவர்கள் நாட்டில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்கள்.
* அங்கு உள்ள மைதானங்கள் அதிகளவிலும் சிறந்த முறையிலும் உள்ளன. இதனால் அவை பயிற்சி செய்வதற்கு நன்றாக உதவுகிறது.
* அங்கு உள்ள அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இங்கு உள்ள அரசு அப்படி இல்லை. எல்லா இடத்திலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
* ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனி தனி பயிற்சியாளரை வைத்து உள்ளார்கள். தேவைக்கு ஏற்றவாறு வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
* விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பண உதவியும் வழங்குகிறார்கள். பதக்கம் வென்ற பிறகு பணம் தருவதுக்கு பதில் பதக்கம் வெல்வதற்கு முன் அவர்களுக்கு பணம் தந்து சிறப்பாக செயல்பட வைக்கிறார்கள்.
* அந்த நாட்டில் உள்ள மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கள் நாடு பதக்கம் வெல்வதை கவுரமாக நினைக்கிறார்கள்.
* விளையாட்டு அமைப்பிற்கும் வீரர்களுக்கும் நல்ல ஒத்துமை இருக்கிறது . எந்த பிரச்சனையும் வருவதில்லை.
* அவர்கள் அதிகளவில் வீரர்களை அனுப்புகிறார்கள், அதுவும் அதிக பதக்கங்களை வெல்வதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
* அங்கு ஒரு விளையாட்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை போல.