மா, பலா, வாழை இவை மூன்றும் முக்கனிகள் என்பது நமக்கு தெரியும். முக்கனிகளின் பயன்கள் பல உள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இவற்றில் முதலில் நாம் மா பற்றி பார்ப்போம்.
- தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
- தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊக்கத்துடன் பிறக்கும்
- மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளிதருகிறது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உண்பதால் இரத்தம் அழுத்தம் சீராகும்.
- மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.
- மாமரத்தின் தளிர் இலை உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
- மாவிலை பறித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்.
- மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாள் இரண்டு வேளைகொடுக்க குடல் பூச்சி அகலும்.
- மாவிலை பறித்து தணலில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டை கட்டு ,கமறல் குணமாகும்.
ஆகவே மாம்பழம் சாபிடுவோம் உடல் நலம் காப்போம்.