பிரிட்டிஷ் இணைய பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான மெக்அபி நிறுவனம் இணையத்தில் மிகவும் ஆபத்தான நட்சத்திரமாக செரில் கோல் இருக்கிறார் என்று கூறியுள்ளது .
அந்த நிறுவனத்தில் அறிவிப்பு படி அந்த பிரபல நட்சத்திரத்தின் 15 சதவீத தேடல்கள் வைரஸ் , ஸ்பேம் மற்றும் மால்வேர் நிறைந்த லிங்குகளாகவே இருக்கிறது . அதிலும் அவரின் படம் மற்றும் வீடியோவை தேடினால் ஆபத்துகள் இன்னும் அதிகமாம் . இவரின் பெயரைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மற்றவர்களின் தகவல்களை தேட முயற்சிக்கின்றனர் .
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஹேரிபாட்டர் கதாநாயகன் டேனியல் ரேட்கிலிப் . மூன்றாவது இடத்தில் இருப்ப்வர் ஜெஸ்ஸி - ஜெ .
எனவே அடுத்த முறை உங்கள் தேடல்களை கவனமாக மேற்கொள்ளுங்கள் ..