பிரதமர் மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தின் போது அவர் பயணம் செய்வதற்காக இருந்த கூடுதல் விமானத்தில் இருந்து செயலிழந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
மோடியின் பயணத்திற்கு கூடுதல் விமானமாக இருந்த போயிங் -746 விமானத்தில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதாவது பிரதமர் தனது பயணத்திற்கு பயன்படுத்தும் ஜம்போ விமானத்தில் ஏதெனும் கோளாறு ஏற்பட்டால் இந்த போயிங் விமானத்தை தான் பயன்படுத்துவார் . மோடி இந்தியாவிற்கு வந்த பின் அந்த விமானம் வணிக பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது .
இந்த விமானம் டில்லி - மும்பை -ஹைதராபாத் வழிகளில் இயக்கப்பட்டு வந்தது . ஜெட்டாவில் இன்று காலை வரும் போது செயலிழந்த குண்டு ஒன்று இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர் . பிரதமர் பயணம் செய்ய இருந்த கூடுதல் விமானத்தில் வெடி குண்டு கண்டுபிடித்ததால் அனைவரும் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர் .
இது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .