BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 3 October 2014

எய்ட்ஸ் நோய் முதன் முதலில் எங்கு தொடங்கியது ?? 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் !!



30 வருடங்களுக்கு முன் தோன்றிய எய்ட்ஸ் நோய் இதுவரை 750 இலட்ச மக்களை தாக்கியுள்ளது . ஆனால் இப்போது தான் ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோய் எங்கு முதன் முதலில் தோன்றி இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் .

ஆயிரக்கணக்கான வைரஸ்கள் தனிப்பட்ட மரபணு ஆய்வின் மூலம் எச்.ஐ.வி  நோய் பெல்ஜியன் காங்கோவின் தலைநகரமான கின்ஸாசா என்னும் இடத்தில் தோன்றி இருப்பதை சந்தேகத்தின் அப்பால் உறுதி செய்துள்ளனர் . பின்னர் இந்த நோய் மத்திய ஆப்ரிக்காவிற்கு பரவியது . இந்த நோய் முதன் முதலாக 1920 ஆம் ஆண்டில் தோன்றியதாக தெரிகிறது .

இந்த ஆய்வின்படி இந்த எச்.ஐ.வி நோய் சிம்பன்சிகளை தாக்கும் சிமியன் வைரஸ் மூலம் பரவி இருக்கலாம் . இந்த சிமியன் வைரஸ் தாக்கிய சிம்பன்சிகளை உண்பதன் மூலம் அது கின்ஸாசா நகரத்தில் பரவி இருக்கலாம் என நம்புகின்றனர் . மேலும் பல காரணங்களால் இந்த நோய் வேகமாக பரவியது . பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்ததாலும் , பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாலும் , அப்போது புதிதாக கட்டப்பட்ட ரெயில்வேயினால் இந்த நோய் வேகமாக பரவியது .

இதற்கு முந்தைய ஆராய்சிகள் எய்ட்ஸ் சிம்பன்சிகளிடம் இருந்து நேரடியாக பரவியதாகவும் , அந்த நோய் மத்திய ஆப்ரிக்காவில் தோன்றியதாகவும் கூறி வந்தது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies