புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் நீதி ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. 2005-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் படம் கொண்ட அதே வகை பத்து ரூபாய் நோட்டுகளில், இரு பக்க வரிசை எண்களிலும் உள்பொதிந்து அச்சடிக்கப்படும் "ஆ' என்ற எழுத்து சேர்க்கப்பட்டு புதியதாக இது வெளியிடப்படும்.
இந்தப் புதிய பத்து ரூபாய் நோட்டில் ஒருபுறம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ஜி ராஜனின் கையொப்பமும், மறுபுறம் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டும் இருக்கும். ஏற்கெனவே புழக்கத்திலிருக்கும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து வகை பத்து ரூபாய் நோட்டுகளும் செல்லத்தக்கவையே என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.